
பாபரி மஸ்ஜிதை முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமாம்!
என்ன நெஞ்சழுத்தம்! இந்த நிதின் கட்கரிக்கு. இல்லை, இல்லை இந்த ரத்தக் காட்டேரிக்கு! ஆம்!
பல்லாயிரக்கணக்கான உயிர்களை குடித்த இந்த ரத்தக்காட்டேரி கும் பலுக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தால், முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை விட்டுக்கொடுக்க வேண் டும் என்று கூறுவார்கள்!
ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்துக் களையும், முஸ்லிம்களையும் இன்னும் பிற சமூக மக்களையும் மதவெறியை தூண்டி, நாட்டின் ஒற்றுமையை குலைத்து, இந்த சதிகார சங்கும்பல் தங்களை அடையாளப்படுத்த முனைந்த சதித்திட்டம் தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு&ராமர் கோவில் கட்டும் திட்டம்.
எந்த ஒரு இந்து சகோதரனிடம் வந்து ராமபிரான் கேட்டார், பாபரி மஸ்ஜிதை இடித்தால்தான் நான் உனக்கு அருள்பாளிப்பேன் என்று?
எந்த ஒரு இந்த சகோதரன் கேட்டான், பாபரி மஸ்ஜிதை இடிக்க வேண்டும் என்று?
அண்ணனாக, தம்பியாக, மாமனாக, மச்சானாக, குடும்ப உறுப்பினராக, ஒரே தட்டில் உண்ணும் உடன் பிறவா தொப்புள் கொடி உறவாக வாழ்ந்து வந்த இந்து&முஸ்லிம் சகோதரர்களை, மதவெறியை கொண்டு, விரோதி யாக்கி, பகைவனைப்போல் பார்க்க வைத்து, கொலை வெறியை தூண்டி, கொலைகாரர்களாக, காட்டு மிராண்டித்தனமாக முஸ்லிம்களை வெட்டிக்கொல்லும் கொடூரர்களாக மாற்றி நாட்டையே பீதியில் உறைய வைத்து, அதில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட கும்பல் தான் இந்த கொலை வெறிக்கும்பல்.
அண்டை வீட்டு இந்து சகோதரனை, “முஸ்லிம்கள் அன்னியர்கள்” என்று சொல்ல வைத்தது இந்த ஆரியக் கும்பல்.
யார் இந்த ஆரியர்கள்-? இந்த ஆரியர்களின் குடிகெடுக்கும் சதி குணத்தால், எந்த நாட்டிலும் தங்காமல் விரட்டப்பட்டு நாடோடிகளாக திரிந்த வர்கள் தான் இவர்கள்.
இந்தியர்களின் இரக்க குணத்தையும், அப்பாவித்தனத் தையும், பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்குள் வந்து நுழைந்தவர்கள் தான் இந்த வந்தேரிகள். அந்த காலத்திய மன்னர்களாலும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடி யாமல் போய், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், அறியாமையில் கிடந்த இந்து மக்களை அடிமைப் படுத்தி, தாங்கள் தான் கடவுளின் சேவகர்கள் எங்களைக்கொண்டு தான் கடவுளின் அனுக்கிரகத்தை நீங்கள் பெற முடியும் என்ற மாயையை, அச்சத்தை உருவாக்கி இந்திய தீப கர்பத்துக்குள் நுழைந்து கொண்டவர்கள் இந்த வந்தேரிக்கும்பல்.
ஆனால் முஸ்லிம்களின் ஆட்சி காலத்தில் இந்த வேடதாரிகளின் வேஷம் கலைக்கப்பட்டதால், இந்துக் கள் விழிப்படைந்ததால், வஞ்சம் கொண்டார்கள் முஸ்லிம்கள் மீது, அந்த வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள மெல்ல, மெல்ல ஒவ்வொரு காலகட்டத்திலும் முஸ்லிம் விரோத போக்கை கடைபிடித்தது இந்த சதிகாரக்கும்பல்.
தேசம் விடுதலை பெறவேண்டும் என விடுதலை போராட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கியர்கள் இன்னும் பிற சமூக மக்கள், வந்தே மாதரம்! எங்களின் தாய் பூமியை அன்னியனிடம் இருந்து விடுவித்தே தீருவோம்! என சுதந்திர போராட்டக் களத்தில் குதித்து, மார்பில் துப்பாக்கி தோட்டக்களை ஏந்தி, குருதி கொட்ட மண்ணில் வந்தே மாதரம் என்ற வீர கோஷத்துடன் வீழ்ந்து வீரமரணம் அடைந்து கொண்டிருந்தபோது, இந்த உறவாடிக் கெடுக்கும் கும்பல், வெள்ளையர்களோடு ஒயின் (மது) அறுந்திக் கொண்டும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டும், அவனுடன் சேர்ந்து கொண்டு, “இந்த அடிமை நாய்களுக்கு விடுதலை வேண்டுமாம்-” என்று எக்காளமிட்ட கும்பல் தான், இந்த வந்தேரிக் கும்பல்.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக முதலில் உயிர் விட்டவன் ஒரு முஸ்லிம், இந்த தேசத்துக்காக வெள்ளையனை எதிர்த்த முதல் மன்னன் ஒரு முஸ்லிம். இந்திய மண்ணோடு மண்ணாய் கலந்து, கரைந்து வாழ்ந்த, முஸ்லிம்களை, ஏக இறைபற்றும், தேசப்பற்றும் வேறில்லை&ஒன்றே,என்று வாழ்ந்து வரும் இந்திய நாட்டின் முஸ்லிம்களை அன்னியர்கள் என்று சொல்ல வைத்தவர்கள், இந்த அன்னி யர்களான வந்தேரிகள்.
அன்னியர்கள் அல்ல முஸ்லிம்கள் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்று கூறி பிரிவினைக் கூடாது என்ற அண்ணலை, மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்ததும் இந்த ரத்தக் காடடேரிக் கும்பல் தான்.
கடைசியாக தங்களின் பிரித்தாலும் சூழ்ச்சி மக்களுக்கு தெரிந்துவிட்டதை அறிந்து கொண்ட இந்த கும்பல், உலகையே பிரித்தாலும் சூழ்ச்சியால் மிரட்டிப்பார்க்கும் யூதக்கும்பலுடன் சேர்ந்து, நாட்டை துண்டாட நவீன திட்டங்களுடன் காவிகளின் போர்வையில், இந்துக்கள் என்ற போர்வையில் குண்டுவைத்து பல உயிர்களை கொன்று குவித்து ரத்தம் குடித்ததும் இந்த கும்பல்தான்.
ஆனால் பழியை திக்கற்று, பிறந்த நாட்டிலேயே அடக்கப்பட்டு, ஒடுக் கப்பட்டு, சதிகாரர்கள் உருவாக்கிய சந்தர்ப்ப சூழ்ச்சி வலையில் சிக்கி தடுமாறி நிற்கும் முஸ்லிம்கள் மீது போட்டது இந்த கும்பல்.
ஆனாலும், காலமும், நீதியும் செத்து விடாது என்பதற்கிணங்க, மதவெறியை தூண்டிக்கொண்டும், 2 சதவீதம் உள்ள இந்த வந்தேரிக் கும்பல், 98 சதவீத இந்துக்களின் ஒட்டுமொத்த பாதுகாவலர்கள் நாங்கள்தான் என்று அவர்கள் போட்ட வேடம் கலைந்து விட்ட படியால், நீதிமன்றங்களும், நீதியரசர் களும் இந்த சதிகாரக் கும்பலுக்கு துணையோக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு போன காரணத்தால், பாபரி மஸ்ஜித் முஸ்லிம்கள் வசம் ஒப்படைக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகைத்துள்ளதால், உறவாடிக் கெடுக் கும் அஸ்திரத்தை முஸ்லிம்கள் மீது ஏவுகிறது இந்த வஞ்சக்கும்பல்.
முஸ்லிம்கள் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்து விடுங்கள், பாபரி மஸ்ஜிதை! ராமர் கோவில் கட்ட முஸ்லிம்கள் உதவி செய்யுங்கள். நீதிமன்ற தீர்ப்பு யார் பக்கம் வந் தாலும், யாராவது ஒருவருக்கு சங்கடம் தான், விட்டுக்கொடுத்தால், நாங்கள் அருகில் பெரிய மஸ்ஜித் கட்டித் தருகிறோம் என்கிறது சதி காரகும்பல். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக!
ஆம்! முஸ்லிம்கள் விட்டுத்தரு பவர்கள் தான் என்று இந்த கும்பலுக்கு தெரியும், இவர்கள், முஸ்லிம்கள் மீது சொல்லண்ணா அக்கிரமங்களை செய்தும், இந்த கும்பலை நாட்டில் உலாவ விட்டுள்ளனரே இது ஒன்று போதாதா? முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்பவர்கள் தான் என்பதற்கு.
ஆனால், இனிமுடியாது, விட்டுத்தர முடியாது. பாபரி மஸ்ஜித்தை மீட்டெடுத்தே தீருவோம்! அடங்கிக் கிடந்த முஸ்லிம்களை உசுப்பி, தட்டி எழுப்பி விட்டீர்கள்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஒவ்வொரு டிசம்பர் 6&ந் தேதியும், மீட்டெடுப்போம்! மீட்டெடுப்போம், பாபரி மஸ்ஜிதை மீட்டெடுப்போம் என்று எழுப்பிய எழுச்சி ஒலி&குரல், இந்தியாவெங்கும் உள்ள முஸ்லிம்களின் உள்ளங் களில் பட்டு, எதிரொலித்து, நாடெங் கிலும் உள்ள முஸ்லிம்களும், மீட்டெடுப்போம், மீட்டெடுப்போம் பாபரி மஸ்ஜிதை மீட்டெடுப்போம் என்று ஓங்கி ஒலித்த குரலால், ஒடுங் கிப்போனது சங்கும்பல்கள். அந்த பீதியின் பிரதிபலிப்புதான் ரத்தம் குடித்துப்பழகிப் போன, காட்டேரிக் கும்பலின் உறவாடிக் கெடுக்கும் புதிய அவதாரம்.
அதன் தூதுவர்தான் நவீன் கட்கரி இல்லை காட்டேரி.
இனி நல்லதே நடக்கும்.
வினை விதைத்தவன், வினை அறுப்பான் இது விதி.