----------------------------------------
மதானி மீதான புதிய வழக்கு! கொதிக்கும் கேரளா!
| |
மதானி மீதான புதிய வழக்கு! கொதிக்கும் கேரளா! Posted: 22 Jun 2010 11:31 PM PDT 'பெங்களூரில் கடந்த 2008&ம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஒரு பெண் இறந்தார். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 26 பேர் மீது பெங்களூர் நகர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.... [[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]  |
போபால் விழித்துக் கொள்வோம் Posted: 22 Jun 2010 11:28 PM PDT போபால் விஷவாயு துயரம் நாட்டை உலுக்கியது. அது குறித்த தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து நாட்டு மக்களின் சோகத்தையும் ஆத்திரத்தையும் பன்மடங்கு அதிகமாக்கியது. [[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]  |
நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்! Posted: 22 Jun 2010 11:24 PM PDT வளைகுடா நாடுக ளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட அடிமைக ளைப் போல் தான் வாழ்ந்து... [[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]  |
இந்தியா பாகிஸ்தான் கைகள் இணைந்தால் Posted: 22 Jun 2010 11:20 PM PDT ஒரு வெறுப்பில் பிரிந்த இருவர் மீண்டும் இணைவதற்கான விருப்பு ஏற்பட வாய்ப்பே இல்லாமலிருப்பது இந்தியா பாகிஸ்தான் உறவில்தான். மூன்று போர்கள், எல்லைகளில் படை குவிப்பு, தூதரகங்களை மூடிக் கொள்ளுதல்,... [[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]  |
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ . அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.
அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.
*.தூங்கும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322
பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:
غُفْرَانَكَ
ஃகுப்(எ)ரான(க்)க
பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7
*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
ஆதாரம்: நஸயீ 5391, 5444
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 1165
*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّه
பி(இ)ஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345
*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:
பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611
*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு
பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
ஆதாரம்: புகாரி 614, 4719
*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165
*.உண்ணும் போது ஓதும் தூஆ
பிஸ்மில்லாஹி வ அலா பர(க்)கத்தில்லாஹி.
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டும்,அவனது அபிவிருத்திகள் தரும் அருளைக் கொண்டும் உண்ணத் தொடங்குகிறேன்.
*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781
*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915
*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805
*.பயணத்தின் போது ஓதும் துஆ:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.
பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.
பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللَّهُ
யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்
எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
ஆதாரம்: புகாரி 6224
*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த
இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306
*.புத்தாடை அணியும் போது தூஆ
அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.
இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் தூஆ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாதனா வ இலைஹின் நுஷூர்.
நாம் (சிறிய மௌத்தாகிய தூக்கத்தில்) இறந்த பின்னர் நம்மை உயிர் பெறச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
*.களா (இயற்கைத் தேவைக்காகப்) போகும் போது ஓதும் தூஆ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஃகுபுஃதி வல் ஃகபாஇஃதி.
அல்லாஹ் ! நான் தீய ஆண்,பெண் ஷைத்தான்கலிடமிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
*.இயற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வரும் போது ஓதும் தூஆ
அல்லாஹ்!நான் உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்பம் தரக்கூடியதை நீக்கி, எனக்குச் சுகம் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ
அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!
*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ
பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவதும், நன்மையைச் செய்யும் சக்தியும் மேலான, மகத்தான அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.
*.பிறையைக் கண்டதும் ஓதும் தூஆ
அல்லாஹும்ம அஹில்லஹூ அலைனா பில் யும்னி வல் ஈமான் வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம் வத்தவ்ஃபீகி லிமா துஹிப்பபு வதர்ளா.
அல்லாஹ்! இந்த பிறையை அபிவிருத்து உள்ளதாகவும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்பக் கூடியவற்றையும், பொருந்திக் கொள்ளக் கூடியவற்றையும் செய்வதற்கு வாய்ப்பையும் தரக் கூடியதாகவும் வெளியாக்கி வை! (பிறையே!) எனது ரப்பும், உனது ரப்பும்
அல்லாஹ் தான்!
*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ
அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.
அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.
*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா
அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!
உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்......
குறை கண்டத்தில்
கரை கண்டவனாக!
வரிகளில் வலி உண்டு ; வழி இல்லை!
அனைத்திற்கும் பெயரோ
இஸ்லாமிய இயக்கம் - வார்த்தையில் மட்டும்தான்;
வாழ்க்கையில் இல்லை!
வெறிப் பிடித்த எதிரிகளின் நடுவே
சகோதரனின் கறி சுவைப்பதில் எத்துனை இன்பம்!
வைகறையில் காணமுடியவில்லை விடியலை;
உணர்வு இருந்தும் மக்களுக்கு உரிமை இல்லை - காரணம்
ஒற்றுமை இல்லை!
உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்
தொழுகையில் மட்டும்! - பிரிது நேரங்களில்
தொலைவினில் மட்டும்!
அனைத்து அமைப்பினருக்கும் விமர்சினம் உண்டு ;
மறந்துவிட்டோமா
மறுமையில் நமக்கு விசாரணை உண்டு!!
அறிவிக்கவில்லையா அண்ணல் நபி
உன் மேனியின் ஒரு பகுதி சதை உன் சகோதரன் என்று?
மறக்கவில்லை மறக்கவில்லை
சதையினை கடிப்பதற்கு மட்டும் நாம்!
ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிதான் பிடித்துள்ளோம்
ஆனால்
ஆளுக்கு ஒரு முனையை!!
கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை ;
இனி இந்த சமுதாயம் காணட்டும்
புது எழுச்சியை!!!
--யாசர் அராபத்--