அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோட்டைப்பட்டிணம் கிளை வலைப்பூ உங்களை அன்புடன் வரவேற்கிறது.கிளை தொடர்புக்கு சகோ.சாலிகு (கிளை தலைவர்) - 99650 88902,சகோ.செய்யது (ஜெகதை) - 9942449265 இ மெயில் - kottaipatinam@hotmail.com

----------------------------------------

புதன், 1 டிசம்பர், 2010

அயோத்தி தீர்ப்பு -நியாயவான்களின் கொ்நதளிப்பு( டிசம்பர் 6 அன்று பொது மக்களிடம் வினியோகம் செய்ய வேண்டிய பிரசுரத்தின் மாதிரி)

அயோத்தி தீர்ப்பு: நியாயவான்களின் கொந்தளிப்பு
(தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அச்சடிக்கப்பட்டு பொது மக்களிடம் டிசம்பர் 6 அன்று வினியோகிக்கப்பட வேண்டிய பிரசுரத்தின் மாதிரி)


அயோத்தி தீர்ப்பு
அயோத்தி தீர்ப்பு ! (கேலிப்படம் நன்றி வினவு இணையத்தளம்

மதசார்பின்மையில் ஒட்டையை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு!

நீதியரசர் ராஜேந்தர் சச்சார்
-ராஜேந்தர் சச்சார் (ஒய்வுப் பெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி)
இந்தத் தீர்ப்பு பல விஷயங்களைப் பாதிக்கச் செய்திருப்பதுடன், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையிலேயே ஒட்டையை ஏற்படுத்திவிட்டது. 'பள்ளிவாசலை உடைத்து அழியுங்கள்...!' என்று கூறுவதைப் போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவை எட்டுவதற்கு நம்பிக்கை ஒர் அடிப்படையாக இருக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாம் எங்குச் செல்வது? எதை நோக்கிச் செல்வது?  ஒரு குற்றத்தை யாரும் மறந்து விடக்கூடாது. ஒரு குற்றத்தைச் செய்து விட்டு எவரும் தப்பி ஒடவிடாமல் இருப்பதை உறுதி செய்வது தான் நீதிமன்றத்தின் கடமை. முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது அவர்களுக்குள்ள உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான சட்டம் சொலவது என்னவென்றால் ஒரு மகன் தந்தையைக் கொன்றால், தந்தையின் சொத்துக்களைப் பெறும் உரிமை அவனுக்கு இல்லை என்பது தான்! ஆனால் இங்கோ பாபர் பள்ளிவாசலை இடித்த குண்டர்கள் தாங்கள் விரும்பியதைப்  பெற்றிருக்கிறார்கள்.

இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது

ராஜீவ் தவான்

-ராஜீவ் தவான் (மூத்த வழக்குறைஞர்)
பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரு பிரிவினருக்கும் சரி சமமாகக் கூட நிலம் பிரித்துத் தரப்படவில்லை. இஸ்லாமியருக்குச் சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கும், இரு பங்கு இந்துக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது. தார்மீக நீதியும் கிடையாது. அது மட்டுமின்றி இத்தீர்ப்பு நிலத்திற்கு உரிமை கோரிய ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.
இந்த தீர்ப்பு ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. இதிலுள்ள தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் வரலாறே தவறாகிவிடும்.  இந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளைத் தாலிபான்கள் சிதைத்ததுடன் வெளிநாட்டவர்கள் ஒப்பிடுகின்றனர். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கு உரிய நிலம் அவர்களுக்கு மறுக்கப்படுவதற்கும் நீதி வழங்க மதச்சார்பற்ற நிர்வாகத்தால் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களுக்குரிய மரியாதை வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டியது இந்திய ஜனநாயகத்தின் தேவையாகும்.
வன்முறையை நியாயப்படுத்தும் தீர்ப்பு
-ரொமீலா தாப்பர், கே.எம்.ஸ்ரீமாலி, கே.என். பணிக்கர், அமியா குமார்பட்சி, விவன் சுந்தரம், சி.பி. சந்திரசேகர் உள்ளிட்ட 61 வரலாற்றாசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு கடந்த அக்டோபர் 30ம் தேதி அளித்த தீர்ப்பில் வரலாறு காரண காரியங்கள் மதசார்பின்மையின் மாண்புகள் போன்றவை கையாளப்பட்டிருக்கும் விதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்ட இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் எந்தச் சான்றும் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டிருப்பது தவறான கணிப்பு என்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிப்பதில் நீதிபதிகளின் இந்தக் கணிப்பு ஒரு வாதமாக முன்வைக்கப்படும் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகும். சட்டம் சமத்துவத்தின் அனைத்துக் கொள்கைகளுக்கும் இது எதிரானதாகும். தீர்ப்பின் மிகமிக ஆட்சேபணைக்குரிய பகுதி வன்முறை மற்றும் படைபலத்தை நீதிமன்றம் சட்டபூர்வமாக்கியிருப்பது தான்.
நீதி பரிபாலனத்தின் சாதாரண நெறிமுறைக்கு முரணான தீர்ப்பு

அந்திஅர்ஜுனா

-அந்தி அர்ஜூனா (மூத்த வழக்குறைஞர், உச்சநீதிமன்றம்)பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் அது நின்ற இடத்தை இப்போது தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது போல் பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குமா? அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிக தெளிவாக விடப்பட்டுள்ள அம்சம் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சண்டித்தனத்தை கண்டிக்காதது தான்.  சர்ச்சைக்குரிய 2.72 ஏக்கர் நிலம் காலியான இடம் என்பது போல் நீதிபதிகள் கருதியுள்ளார்கள்...1992 பள்ளிவாசல் இடிப்பை இந்த தீர்ப்பு நியாயபடுத்தி அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய இரு தரப்புகளில் ஒன்று வழக்கு தொடுக்கும் போது இருந்த நிலையை தனது வசதிக்கேற்ப சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மாற்றிவிட்டால் (இந்த வழக்கில் இந்துத் தரப்பு), நீதிமன்றம் அந்த வன்செயலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நீதிமன்றங்களில் நிலவும் சாதாரண நீதி பரிபாலன முறையாகும். ஆனால் அவ்வாறு செய்வது இந்த வழக்கில் உள்ள நிலையை போல் சாத்தியமில்லை என்றால் சட்டத்தை தன் கையில் எடுத்துச் செயல்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படும் வகையில் எந்த நீதிமன்றமும் செயல்படாது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் நீதி பரிபாலனத்தின் இந்த அடிப்படையை கூட உணராது தீர்ப்பு அளித்துள்ளது.
தர்க் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை இந்த தீர்ப்பு

பி.எஸ்.அப்பு

-பி.எஸ். அப்பு (முன்னாள் தலைமைச் செயலாளர் பீகார்)
மூன்று நீதிபதிகளும் பள்ளிவாசலை முஸ்லிம்கள் பயன்படுத்தினர் என்றும் பள்ளிவாசலுக்கு வெளியில் 100 எட்டு தூரத்தில் உள்ள ராம் சபூட்ரா (திண்ணையை) இந்துக்கள் பயன்படுத்தினர் என்றும் கருதியுள்ளனர். எனவே இந்த விவாகாரத்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை முஸ்லிம்களிடமும், ராம் சபூட்ரா மற்றும் சீதா கி ரோசி (சீதையின் சமையல்கட்டு) இருந்த இடத்தை  இந்துக்களிடம் ஒப்படைப்பதும் தான் நியாயமான, சாத்தியமான, நீதியான தீர்ப்பாக இருக்கும். திரேட்டா யூகத்தின் மிகப் பெரும் கதாநாயகனான ராமர், 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் சமாதியான ராமர், பள்ளிவாசலின் கும்பத்தின் கீழ் தான் பிறந்தார் என்று சொல்வது தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காத்து சட்டத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இறுதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

வரலாற்றுக்கு அவமானம் கற்பிக்கும் தீர்ப்பு


டி.என். ஜா




-டி.என்.ஜா (வரலாற்றாசிரியர்)வரலாற்று சான்றுகளை புறந்தள்ளும் வகையில் நம்பிக்கைகளை அனுமதிக்க கூடாது. என்ன நடந்துள்ளது என்றால் நம்பிக்கை பகுத்தறிவை வென்று விட்டதாக தோன்றுகிறது. வரலாற்றை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது நம்பிக்கை. இந்தத் தீர்ப்பு உண்மைக்கும், வரலாற்றுச் சான்றுகளுக்கும், வரலாறு எழுதியலுக்கும் இழைக்கப்பட்டுள்ள ஒரு அவமானம். தலைநகர் டெல்லியில் அனுமான் கோயில்களின் எண்ணிக்கை திடுதிடுப்பென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உரிமை இல்லாத நிலங்களில் கட்டப்படும் இந்த எண்ணற்ற அனுமன் கோயில்களால் எழும் பிரச்னைகளையும் ராமர் கோயில் பிரச்சினையோடு சேர்த்துத் தீர்க்கும்  பொறுப்புக்கு அரசம் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் ஆளாகப் போகின்றன.
ஜனநாயகத்திற்கான தகுதிகளை இழந்து நிற்கிறோம்

நானி பல்கிவாலா


-நானி பால்கிவாலா (பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் பிறந்தாரா அங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் 1994ல் நரசிம்மராவ் அரசு கருத்துக் கேட்டப் போது எழுதியது)நம்பிக்கைகள், வரலாறு, புராணம் மற்றும் உடனடி அரசியல் பிரச்சினைகளில் முடிவெடுக்க நீதிமன்றத்தை நாடுவதற்கு விரும்புகின்ற நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி இது குறித்து மிக்க ஆவலுடன் இருக்க நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது (ஜனநாயகத்திற்கான) எல்லா தகுதிகளையும், நேர்மையையும் நாம் இழந்து நிற்பதையே காட்டுகிறது.
முஸ்லிம்களை போல இந்துக்கள்   அமைதியாக இருப்பார்களா?

குல்திப் நய்யார்

குல்தீப் நய்யார் (அரசியல் விமர்சகர்)பாப்ரி பள்ளிவாசல் தீர்ப்புக்குப் பிறகு நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. எங்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதன் பெருமை  முழுக்க முஸ்லிம்களுக்கே போய் சேரும். இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்களும் அவர்களே. அதற்குக் காரணம் உள்ளது.
பொதுவாக, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் எண்ணியபோதும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அத்தீர்ப்பில் திருப்தி அடையாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாகவே நிறைவேற்றியுள்ளனர். அந்த அடிப்படையில், இப்போது மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
ஒருவேளை, இத்தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக வந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று ஊகித்துப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைப் போல் அமைதியாக இருந்திருப்பார்களா? தீர்ப்பு அவர்களுக்கு முழு அளவில் சாதகமாக இல்லாதிருந்தும்கூட தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். எனவே, இத்தீர்ப்பை அவர்கள் தன்னடக்கத்தோடு ஏற்றுக்கொண்டனர் என்றோ, அதனால் முஸ்லிம்களின் அச்சம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றோ கருதுவதற்கு இடமில்லை. தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் இரு தரப்பினரும் கையாண்ட அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்பதை அனைவரும் அறிவர்.
சிறுபான்மை சமூகத்தினர், சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறும் போது பெரும்பான்மை இந்து சமுதாயம் அப்படி ஏதும் உறுதி கூற முன்வரவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1992ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.


தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது.
ரோமீலா தாப்பர்



-ரொமீலா தாப்பர் (வரலாற்று ஆசிரியர்)
இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு குழுவும் தங்கள் கடவுள் இந்த இடத்தில் பிறந்தார் என்று கூறி தாங்கள் ஒரு பெரும் மதநம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு (அதாவது ராமர் பிறந்த இடம் குறித்து சங்பரிவார் ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னது போல்) பிறருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கோருவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இனி தேவையான சொத்துக்களை சுட்டிக்காட்டி சண்டையை ஏற்படுத்துவதற்காக இது போல பல ஜன்மஸ்தானங்கள் உருவாக்கப்படும். திட்டமிட்டு வரலாற்றுச் சின்னம் (பாபரி பள்ளிவாசல்) இடிக்கப்பட்டது கண்டிக்கப்படாத நிலையில் இது போன்ற இடிப்புச் செயல்களை எப்படி தடுத்து நிறுத்த இயலும்?
வரலாற்றில் நடந்தது நடந்தது தான். அதனை மாற்ற இயலாது. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்க இயலும். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் பாடங்களை கற்க இயலும். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது. இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சிதைத்துள்ளது. வரலாற்றின் இடத்தில் மதநம்பிக்கையைப் புகுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்ட பரிபாலனம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும் போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.

அநீதியின் வெளிப்பாடு
ஹர்ஷ் மந்தர்


-ஹர்ஷ் மந்தர் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக சேவகர்)இந்த தீர்ப்பு நடுநிலையானது என்றும் நேர்மையானது என்றும் சில விமர்சகர்கள் கூறுவது எனக்கு வினோதமாக இருக்கின்றது. நாம் இனி பழையவற்றை மறந்து முன் செல்ல வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீதிக் கிடைப்பதை அனுபவிக்காத வரையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இயலாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த வழக்கு குற்றவியல் ரீதியாக யார் தவறு செய்தார்கள் என்பதை நிர்ணயிக்கும் வழக்கு அல்ல என்பது உண்மை தான். அனால் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ராமர் கோயில் கட்டும் இயக்கத்தின்; முக்கிய அடிப்படைகள் அனைத்தையும் கொள்கையளவில் ஏற்கும் வகையில் அமைந்துள்ளது....ராமர் கோயில் இயக்கத்தின் போர் பரணியாக 'அந்த இடத்தில் தான் ராமர் கோயில் கட்டுவோம்' என்பதே. நம்பதகாத வரலாறு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலும், ஏமாற்று மற்றும் அடக்குமுறையின் அடிப்படையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சாசனச் சட்டத்திற்கு சவால் விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்த, அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்த ஒரு இயக்கம் வெற்றிப் பெற்றுள்ளது.

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!
சித்தார்த் வரதராஜன்


-சித்தார்த் வரதராஜன் (தி ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியர்)16வது நூற்றாண்டில் அயோத்தியில் தான் துளசிதாசர் ராம் சரித் மனாஸ் நூலை எழுதினார். எனினும் அதில் ராமர் பிறந்த இடம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் அதன் பின் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து இப்போது ராமர் பிறந்த இடத்தை லக்னோ நீதிமன்றம் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்திருக்கின்றது!
இந்தியாவில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அனைத்து வகையான நம்பிக்கைகளும் இருக்கலாம். ஆனால் சட்டத்தில் எது தவறு எது சரி என்பதைத் தீர்மானிப்பதற்கான நடுவராக அந்த நம்பிக்கை மாறிவிடக்கூடாது. அதே போல், வரலாற்றுத் தவறுகளைத் திருத்துவதும், நீதி வழங்குவதற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது.

அகழ்வாராய்ச்சி சான்றுகளை மறுதலித்த தீர்ப்புடி.கே. ராஜலட்சுமி (பிரண்;ட்லைன் மாதமிருமுறையின் செய்தியாளர்)
இந்து கோயில் இருந்த இடத்தில் தான் பாபரி பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று மூன்று நீதிபதிகளில் இருவர் கூறியிருப்பது இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் நடத்திய அகழ்வாராய்ச்சியின் போது வெளியான அனைத்து சான்றுகளின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. அகழ்வாராய்ச்சியின் போது அங்கு மிருக எலும்புகளும் பரவலாக கிடைத்ததும், சுர்க்கி (முஸ்லிம்கள் பயன்படுத்திய ஒரு வகையான கட்டுமானப் பொருள்) மற்றும் சுன்னாம்புக் காரை ஆகியவையும் அங்கே பரவலாக கிடைத்ததும் அந்த இடத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளாக அமைந்துள்ளன. பள்ளிவாசல் கோயிலின் மீது கட்டப்பட்டது என்ற வாய்ப்பையும் அவை மறுதலிக்கின்றன.

                                                             www.tmmk.info

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ . அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!

உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்......‏

குறை கண்டத்தில்
கரை கண்டவனாக!
வரிகளில் வலி உண்டு ; வழி இல்லை!

அனைத்திற்கும் பெயரோ
இஸ்லாமிய இயக்கம் - வார்த்தையில் மட்டும்தான்;
வாழ்க்கையில் இல்லை!

வெறிப் பிடித்த எதிரிகளின் நடுவே
சகோதரனின் கறி சுவைப்பதில் எத்துனை இன்பம்!

வைகறையில் காணமுடியவில்லை விடியலை;
உணர்வு இருந்தும் மக்களுக்கு உரிமை இல்லை - காரணம்
ஒற்றுமை இல்லை!

உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்
தொழுகையில் மட்டும்! - பிரிது நேரங்களில்
தொலைவினில் மட்டும்!

அனைத்து அமைப்பினருக்கும் விமர்சினம் உண்டு ;
மறந்துவிட்டோமா
மறுமையில் நமக்கு விசாரணை உண்டு!!

அறிவிக்கவில்லையா அண்ணல் நபி
உன் மேனியின் ஒரு பகுதி சதை உன் சகோதரன் என்று?
மறக்கவில்லை மறக்கவில்லை
சதையினை கடிப்பதற்கு மட்டும் நாம்!

ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிதான் பிடித்துள்ளோம்
ஆனால்
ஆளுக்கு ஒரு முனையை!!

கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை ;
இனி இந்த சமுதாயம் காணட்டும்
புது எழுச்சியை!!!

--யாசர் அராபத்--